சீனாவின் ஜிலின் மாகாணத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த விமான கண்காட்சி கண்கவர் சாகச நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. சீனாவின் ஜிலின் மாகாணத்தில் ஷன்ஷங் நகரில் 5 நாட்களாக விமான கண்காட்சி நடைபெற்றது. இதை 6 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். கடைசி நாளில் விதவிதமான போர் விமானங்கள் ராணுவ சரக்கு விமானங்கள், வண்ண வண்ண புகையை கக்கியபடி வானில் வர்ண ஜாலம் நிகழ்த்தின. இதை பார்த்த பார்வையாளர்கள் சிலிர்ப்பில் மூழ்கினர். இந்த கண்காட்சியில் 13 வகையான 45 விமானங்கள் இடம்பெற்றன.











