திருவையாறு: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரவீன்குமார் (14). 9ம் வகுப்பு படித்து வந்தான். திருவையாறு ராஜாநகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிபிரசாத் (15). 10ம்வகுப்பு படித்து வந்தான். நண்பர்களான இருவரும் நேற்று காலை காவிரி ஆற்று படித்துறையில் குளித்து கொண்டிருந்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் திடீரென இருவரும் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து ஆற்றில் இறங்கி தேடினர். புஷ்யமண்ட படித்துறை எதிரே காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.