அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூர் கல்லிபேரிச்சி குடியிருப்பை சேர்ந்த ஜான்பீட்டர் மகன் யர்ஷித் (3), அந்தோனி மகள் அனன்யா(2). இருவரும், நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தனர். அவர்களது பெற்றோர் ஐஸ் வாங்கி கொடுத்துவிட்டு, வீட்டிற்கு அருகே விறகு உடைக்க சென்றனர். ஐஸ் சாப்பிட்டபின், அருகில் உள்ள குளத்தில் கை கழுவ சென்ற இருவரும் குளத்தில் வழுக்கி விழுந்து பலியாகினர்.
குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
0