சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்புக்கான உறுதிமொழியை மாணவிகள் எடுத்தனர். குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.