திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்ப நகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது. 3 இரு சக்கர வாகனங்கள் எரிந்த தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் சிக்கிய தந்தை பிரேம்குமார், தாய் மஞ்சுளா, மிதுலன் (2) படுகாயம் அடைந்துள்ளனர். நபிலன் (1) என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.