மாதனூர்: குழந்தை பிடிக்க வந்த ஆசாமி என நினைத்து வடமாநில வாலிபரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் ராஜா கடை செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி பள்ளி அருகே முதியவர் ஒருவர் தனது பேத்தியுடன் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் குழந்தையை கைகாட்டி அழைத்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வட மாநில வாலிபரை பிடித்து எதற்காக குழந்தையை கூப்பிடுகிறாய் என்று கேட்டுள்ளனர். அந்த வட மாநில வாலிபருக்கு தமிழ் தெரியாததால் அவர் பேசிய பாஷை அவர்களுக்கு புரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் குழந்தை பிடிக்கும் ஆசாமியாக இருக்கலாம் என நினைத்து அவரை சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அந்த வட மாநில வாலிபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிடிக்க வந்த ஆசாமி என நினைத்து வடமாநில வாலிபரை தாக்கிய பொதுமக்கள்
56