அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள் புகார் குழு அமைக்க தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு அளித்துள்ளது. புகார்களை அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க Anti drug club-களை ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.