பெங்களூரு: அரசுக்கு நெருக்கடி அளிக்கக்கூடாது என முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கினார். பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமார் முன்னிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. தனியார் ஓட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசுகையில், ‘கன்னட மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு அளித்துள்ளனர். தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நாம் அமல்படுத்தவேண்டும். எனவே, எம்எல்ஏக்கள் அரசுக்கு நெருக்கடி அளிக்கக்கூடாது. கட்சி சார்ந்த கோரிக்கைகள் கட்சியின் அலுவலகத்திலும் அரசு சார்ந்த கேள்விகளுக்கு என்னிடமும் எம்எல்ஏக்கள் சந்தித்து கேள்விகள் கேட்க வேண்டும். இதை விட்டு கட்சி மற்றும் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் எம்எல்ஏக்கள் நடந்து கொள்ளக்கூடாது’ என்றார்.