மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுக்கு வந்த மிரட்டல் போன் அழைப்பில் பேசிய மர்ம நபர், ‘மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அவரது மகன் ஜீஷன் சித்திக் அலுவலகம் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டது போல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் ெகால்வோம். அடுத்த 10 நாட்களுக்குள் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், பாபா சித்திக்கை கொலை செய்துபோல் கொன்று விடுவோம்’ என மிரட்டல் விடுத்து போன் இணைப்பை துண்டித்தார்.
அதிர்ச்சியடைந்த மும்பை போலீசார், உத்தரபிரதேச காவல் துறையுடன் தகவலை பகிர்ந்து கொண்டனர். அதையடுத்து முதல்வர் யோகிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விகாரம் குறித்து மகாராஷ்டிரா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.