கீழக்கரை: திருப்புல்லாணி ஒன்றியம், பத்ராதரவை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பத்ராதரவை, நயினாமரைக்கான், வண்ணாங்குண்டு, களிமண்குண்டு ஊராட்சி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுவதை கலெக்டர் பார்வையிட்டார்.
பொதுமக்களின் கோரிக்கை தொடர்பான மனுக்களை பதிவு செய்து 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காண வேண்டுமென அலுவலர்கள், பணியாளர்களிடம் கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் அறிவுறுத்தினார். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி, வட்டார வளர்ச்சி ஆணையர் ராஜேஸ்வரி, தாசில்தார் ஜமால் முஹமது உட்பட பலர் பங்கேற்றனர்.