Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

இசைஞானி இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இளையராஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று இளையராஜாவுக்கு ரசிகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். முதலமைச்சரின் தனிச் செயலாளர் சண்முகம் இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இசைஞானி இளையராஜாவுக்கு நடிகர் ராமராஜன் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், இசைஞானி இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தில் கூறியதாவது; நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! தங்களின் #Symphony இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! என்று கூறியுள்ளார்.