சென்னை: கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய ராகுலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கலைஞரின் கனவுகளை நனவாக நாம் தொடர்ந்து ஒன்றிணைவோம். கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு முன்னேறியது என ராகுல் கூறியிருந்தார். அன்பு சகோதரர் என குறிப்பிட்டு ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.