சென்னை: காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது அவசியம்; குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தந்தால்தான் மக்களுக்கு காவலர்கள் மீது நம்பிக்கை வரும். சமூக ஊடகங்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று காவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.