சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தேர்வையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொடரும் தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.