Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் புதியதாக 4 கலை அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் மட்டும் 191 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் புதிய கல்லூரிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த கட்டிங்கள் மற்றும் குடியிருப்புகளை திறந்த வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் உதயநிதி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதன்படி, வேலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதாவது, வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிதாக கட்டப்பட்ட கல்விசார் கட்டிடம் மற்றும் குடியிருப்புகளும் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழக கல்லூரிகளும் (Constituent College) உள்ளன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.

அத்துடன், மே 21 மேலும் 11 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன்மூலம் மேலும் 9150 இடங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று (ஜூன் 20ந்தேதி) மேலும் 4 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்முலம் கலை அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 36 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், துணை வேந்தர், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.