சென்னை: நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டிய குடியிருப்பை காணொளியில் முதல்வர் திறந்துவைக்கிறார். பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்திற்கான பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். திருவட்டார், பொன்னேரி, கிள்ளியூரில் வட்டாட்சியர் அலுவலகம், தேனியில் கூட்டரங்க கட்டடமும் திறந்து வைக்கிறார்.