சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்ந்து தெரிவித்திருந்த நிலையில் தனது டிவிட்டர் பதிவை ராணுவம் நீக்கியது ஏன்? என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த முதல் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற இக்நாடியஸுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேஜர் பதவி உயர்வு குறித்து டிவிட்டரில் ராணுவம் வெளியிட்ட பதிவை சுட்டிக்காட்டி முதல்வர் வாழ்ந்து கூறியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியிருந்த அந்த பதிவை தற்போது ராணுவம் நீக்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ராணுவம் தனது பதிவை ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என்று கனிமொழி எம்.பி. டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.