தமிழகத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பிற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர், பின்னர் மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார்.


















