சென்னை: முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்துள்ளது. ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி தான் பேசியதற்கு குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி குமரகுரு அவதூறாக பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகி வெங்கடாசலம் அளித்த புகாரில் குமரகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.