ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்குவதை மீனவர்கள் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீனவர்கள் மீதான அடக்குமுறை இன்னும் அதிகமாகி உள்ளது. தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டு
மீனவர்களை இலங்கை படையினர் தாக்குவது வலைகளை அறுத்து எறிவது தொடர்கதையாகியுள்ளது.