சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்திய வனப் பணி பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 2024ம் ஆண்டு IFoS பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை சந்தித்து பாராட்டினேன். UPSC குடிமைப் பணி தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் மாணவர்களுக்கு மிகப் பெரும் ஊக்கமாக நான் முதல்வன் அமைந்துள்ளதை அவர்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது. கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள், இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக தயாராகி, எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டை தொட்டுவிடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய வன பணியிடத்துக்கு தேர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
0
previous post