சென்னை: ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜூன் 11-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் செல்கிறார். குறுவை சாகுபடிக்காக மே 12-ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளாதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.