Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் முதல்வராக்குன எடப்பாடி கிட்ட இருந்து என்னை காப்பாத்திக்க வேண்டிய நிலைமை: சசிகலா வேதனை

சிவகங்கை: நான் முதலமைச்சரா வைத்து விட்டு போன எடப்பாடியிடம் இருந்து என் உயிரை காப்பாத்திக்க வேண்டி நிலை ஏற்பட்டதாக பிரசாரத்தில் சசிகலா பேசினார். சிவகங்கை, அரண்மனைவாசல் முன்பு, அஇபுதமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் சசிகலா பேசியதாவது: என்னை சில பேரு சொல்லும்போது வி.கே.எஸ் என்பார்கள். வி-க்கு வேலு நாச்சியார்ங்குறாங்க. கே-க்கு குயிலிங்கறாங்க. எஸ்-க்கு சசிகலான்னு சொல்வாங்க.

அது எனக்குப் பெருமையா இருக்கும். நம்ம கட்சியில நடந்த பிரச்னைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும். நான் சிறைக்கு போனதுல இருந்து உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். நான் அங்ேக இருந்து மீண்டு வந்ததே பெரும்பாடு. நான் யாரை முதலமைச்சரா வைத்து விட்டு போனேனோ, அவர்கிட்ட இருந்து உயிரை காப்பாத்திக்க வேண்டிய ஒரு நிலைமை எனக்கு ஏற்பட்டது. அப்பவெல்லாம் வேலுநாச்சியாரை நினைச்சுக்குவேன். தமிழ்நாட்டு மக்களைத்தான் நான் முழுசா நம்புறேன். இவ்வாறு அவர் பேசினார்.