சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது; எப்போதும் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டம் நல்ல திட்டம் தான்.
இதில் மாற்று கருத்து ஏதும் கிடையாது. புதிய கல்விக்கொள்கையில் காலை உணவு திட்டம் இருக்கவேண்டும் என்ற கருத்து இருக்கிறது. புதுச்சேரியில் காலை உணவுத்திட்டத்திற்கு பதிலாக பால் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை நான் வரவேற்கிறேன், பசியோடு யாரும் இருக்கக்கூடாது. ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகமாக குழந்தைகளிடம் காணப்படுகிறன, மருத்துவர் என்ற முறையில் நன்கு சத்தான உணவு கொடுப்பதை வரவேற்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.