டெல்லி: 3 ஐகோர்ட் தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐகோர்ட் தலைமை நீதிபதிகளான டெல்லி – சதீஸ்சந்திர சர்மா, ராஜஸ்தான் – அகஸ்டின் ஜார்ஜை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப் மேத்தாவையும் நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.