மும்பை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நேற்று முன்தினம் மும்பைக்கு வந்திருந்தார். அப்போது, மாநில டிஜிபியோ, மும்பை போலீஸ் கமிஷனரோ தன்னை வரவேற்க வரவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார். இந்த நிலையில்,டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் கருத்தை வலியுறுத்தும் வகையில் பேசினார். ஜெகதீப் தன்கர் பேசுகையில்,‘‘ நாட்டின் தலைமை நீதிபதிக்கான நெறிமுறைகள் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அது தனிப்பட்டது அல்ல, அவர் வகிக்கும் பதவிக்கானது. மேலும் இதை அனைவரும் மனதில் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். நெறிமுறைகளைப் பின்பற்றுவது அடிப்படையானது’’ என்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை வரவேற்க டிஜிபி வரவில்லை நெறிமுறைகளை பின்பற்றுவது அடிப்படையானது: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கருத்து
0