சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் முருகானந்தம். தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார். 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்த முருகானந்தம் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் முருகானந்தம். கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார் முருகானந்தம். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதித்துறை செயலராக இருந்தார்.
2001-04 வரை கோவை ஆட்சியராக பணியாற்றியிருந்தார் முருகானந்தம். கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பு வகித்துள்ளார்.