சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “விடுதலை வீரர்களைப் போற்றி வணங்கும் அரசாக ‘தென்பாண்டிச் சிங்கம்’ வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடி வருவதுடன், இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் அவரது முழுவுருவ வெண்கலச் சிலையினைத் திறந்து வைத்தேன்! வீரத்தின் விளைநிலமான சிவகங்கைச் சீமையின் மைந்தனாக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மானம்காத்த மருதிருவரோடு இணைந்து போரிட்ட வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேலுநாச்சியார், மானம்காத்த மருதிருவரோடு இணைந்து போரிட்ட வாளுக்கு வேலி அம்பலத்துக்கு வீரவணக்கம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின்
0