சென்னை : ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, கலைஞருக்குப் பாராட்டு மழை பொழிந்தீர்கள். கூட்டாட்சி, இந்திய ஜனநாயகம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பை நேர்த்தியாக எடுத்துரைத்துள்ளீர்கள். தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்திய தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.