Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

இந்திய அரசியலில் தனிக்களத்தை உருவாக்கிய மு.க.ஸ்டாலின்; பாஜகவுடன் கைகோர்த்தது அழிவை தேடுவதற்கு சமம் : ஆங்கில நாளேடு கட்டுரை!!

மும்பை : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், களத்தில் திமுக தலைமையிலான கூட்டணி முன்னணியில் உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே கணித்துள்ளது. எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையோ ஒருமைப்பாடோ தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள கட்டுரையில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என முழு பெயரையும் குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின், அந்த முழு பெயரின் பாரம்பரியத்தை நிரூபிக்கும் வகையில், 4 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலில் தனக்கென ஒரு தனிக்களத்தை மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக உருவாக்கி உள்ளதாகவும் பல முன்னோடி திட்டங்கள், கூட்டாட்சி உறுதி போன்றவற்றால் தமிழ்நாட்டின் எல்லையை தாண்டி அவரது செல்வாக்கு விரிந்துள்ளது என்று கட்டுரையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான அரசியல் மற்றும் கொள்கை சார்ந்த ஆட்சியால் தமிழ்நாடு இன்று ஒரு உறுதிப்பாடான கட்டமைப்புடன் திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையோ ஒருமைப்பாடோ தெரியவில்லை என்று சாடியுள்ள இந்தியா டுடே, நீண்ட இழுபறிக்கு பிறகே அதிமுக - பாஜக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை, இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் திமுக நிலைப்பாட்டுக்கு எதிரான நிலையை அதிமுக எடுக்க முடியாது என்றும் வட இந்திய கொள்கை திணிப்புகளை எதிர்க்கும் கலாச்சாரத்தை கொண்ட தமிழ்நாட்டில் பாஜகவுடன் அதிமுக கைகோர்ப்பது அழிவைத் தேடி கொள்வதற்குச் சமம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் களத்திற்கு புதிதாக வந்துள்ள நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக்கழகம் இன்னும் தேர்தல் களத்தில் சோதித்துப் பார்க்கப்படவில்லை என்றும் அதே சமயம் நடிகர் விஜய்யால் எழக்கூடிய சவாலை துணை முதல்வர் உதயநிதியை கொண்டு திமுக எதிர்கொண்டு விட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.