சென்னை : SheToilet எனும் இந்தப் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு எனறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க அவர்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் நடமாடும் ஒப்பனை அறை வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.ஒரு மண்டலத்திற்கு 1 என்ற கணக்கில் மொத்தம் 15 நடமாடும் ஒப்பனை அறைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இந்த ஒப்பனை அறையில் கழிவறை, சானிடரி நாப்கின்கள், உடை மற்றும் சிறு அறை, தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கான தனி அறை ஆகியவை அடங்கியுள்ளது. சுமார் 4.37 கோடி செலவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு ஒப்பனை அறையின் மதிப்பு ரூ. 29 .13 லட்சம் ஆகும். இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் செய்தி பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “.சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள #SheToilet எனும் இந்தப் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு! அதனை உறுதிசெய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,”எனத் தெரிவித்துள்ளார்.