சென்னை : பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நித்யஸ்ரீ சிவனின் திறமை, கடினமான உழைப்பு நமது அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன், பேட்மிண்டன் போட்டியின் எஸ்எச்-6 பிரிவில் வெண்கலம் வென்றார்.