பெங்களூரு :நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிய அனுமதித்த ஆளுநரின் முடிவுக்கு எதிரான வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்படுகிறது.