சென்னை : முதலமைச்சர் கோப்பை 2023 என்ற பெயரில் சென்னை மெரினா கடற்கரையில் ஜூலை 8 அதாவது இன்று முதல் – ஜூலை 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அணிகள் பங்கேற்க உள்ளன. பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் கல்லூரி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டிகளைக் காண வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.