பெங்களூரு: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். பெங்களூரு விமான நிலையத்தில் முதல்வரை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக பெங்களூருவில் இன்றும், நாளையும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.