சென்னை: தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்க வேண்டும். தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டுக்கு புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதைக்கு நிதி ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும். இடைக்கால ஒதுக்கீடாக ரூ.976.1 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.301.3 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.