சென்னை: முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நேற்று பொறுப்பேற்றார்.
இதையடுத்து முதலமைச்சரின் தனிச் செயலாளர் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலினின் முதன்மை தனிச்செயலாளராக இருப்பார். இவருக்கு அடுத்தபடியாக 2வது முதன்மைச் செயலாளராக சண்முகம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ். தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்து குறிப்பிடத்தக்கது.