சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அமைச்சரவை கூட்டத்தில் பயணத்திற்கான ஒப்புதலை தமிழ்நாடு அமைச்சரவை வழங்க உள்ளது. இன்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இந்த பயணத்தின் போது தொழில் முதலீடுகளை அதிகமாக ஈர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையையும் இந்த பயணத்தின் போது முதலமைச்சர் சந்திக்க உள்ளார். அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரிகள், பிற தொழில் நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார். என்னென்ன முதலீடுகள் தற்போது தமிழகத்திற்கு வர இருக்கின்றன உள்ளிட்டவைகள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஆக.27-ல் -முதலமைச்சர் அமெரிக்கா செல்கிறார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.