சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை, ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை என தீட்சிதர்கள் தரப்பு பதிலளித்துள்ளது.


