தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் சியா சீட்
500 மில்லி பால்
சிறிதுபாதாம்
3பேரிச்சம் பழம்
2 டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை
செய்முறை:
பேரிச்சம்பழம் பாதம் பொடியாக நறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து அரை பங்காக காய்ச்சி எடுக்கவும்.சியா விதைகளை முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு அதில் நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும்.அதில் ஆறின பால் பாதாம் பேரிச்சம் பழம் கலந்து பரிமாறும் கிளாசில் சேர்த்து பரிமாறலாம்.நம்முடைய மிகவும் ஆரோக்கியமான சியா ட்ரின்க் தயார். உடலுக்கு மிகவும் நல்லது.