தேவையான பொருட்கள்
1ஸ்பூன் சியா விதை
1/2 எலுமிச்சை பழச்சாறு
1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர்
தேவைப்பட்டால் உப்பு அல்லது சர்க்கரை
செய்முறை:
ஒரு பவுலில் சியா விதை சேர்த்து 1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். இது ஊறி ஜெல்லி பதத்திற்கு வந்து விடும்.பிறகு ஒரு டம்ளரில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து எடுத்து தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். பிறகு ஊற வைத்த சியா விதைகளை இதில் சேர்த்து கலந்து விடவும்.தேவைப்பட்டால் உப்பு அல்லது சர்க்கரை இதில் சேர்த்து கலந்து குடிக்கலாம். எதுவும் சேர்க்காமல் அப்படியே காலையில் தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து வரும். சியா லெமனேட் தயார்.