ராய்கர்: சட்டீஸ்கரில் பழங்குடியினத்தை சேர்ந்த 27வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். சட்டீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் புசவுர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 27வயது இளம்பெண் திங்களன்று ரக்ஷாபந்தனை கொண்டாடிய பின்னர் உள்ளூரில் நடந்த திருவிழாவிற்காக சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் அவரை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தேவையான உதவிகளை அரசு செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
சட்டீஸ்கரில் பழங்குடியின பெண் கூட்டு பலாத்காரம்
previous post