ராய்ப்பூர்: சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் மேயராக பாஜவை சேர்ந்த மீனால் சவ்பே வெள்ளியன்று பொறுப்பேற்றார். அவருடன் புதிதாக 69 மாநகராட்சி உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். மேயராக மீனால் பொறுப்பேற்ற நிலையில் அவரது மகன் மிரினாக் சவ்பே தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மிரினாக் சவ்பே மற்றும் 5 பேரை கைது செய்துள்ளனர். ஞாயிறன்று சிறையில் இருந்த நிலையில் நேற்று இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்று மேயர் உறுதி அளித்துள்ளார்.
Advertisement


