மக்களவை தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடங்கியது. சட்டீஸ்கரில் 20 தொகுதிகளில் முதற்கட்டமாகவும், மிசோரமில் 40 தொகுதிகளில் ஒரே கட்டமாகவும் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. சட்டீஸ்கரில் மட்டும் 2 கட்டமாகவும் (2ம் கட்ட தேர்தல் வரும் 17ம் தேதி) மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. நக்சல் அச்சுறுத்தல் உள்ளதால் சட்டீஸ்கரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 20 தொகுதிகளில் 5,304 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.