புதுடெல்லி: சட்டீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது ரூ.2100 கோடி மதுபான ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ கவாசி லக்மா, அவருடைய மகன் ஆகியோரின் சொத்துக்கள் உள்பட மொத்தம் ரூ.6.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை நேற்று தெரிவித்துள்ளது. 6 முறை எம்எல்ஏவான கவாசி லக்மா காங்கிரஸ் ஆட்சியில் கலால்வரி அமைச்சராக இருந்தார். அவருடைய மகன் ஹரிஷ் லக்மா பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
சட்டீஸ்கர் மதுபான ஊழல் வழக்கு காங். அலுவலகத்தை முடக்கியது ஈடி
0