நாராயண்பூர்: சட்டீஸ்கரில் நேற்று நடந்த என்கவுன்டரில் 3 பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம்.,நாராயண்பூர் மற்றும் கங்கர் மாவட்டங்களின் எல்லைக்கு அருகில் அபுஜ்மாத் என்ற வன பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு அதிரடி படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிரடிப்படை(எஸ்ஐடி),எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் அபுஜ்மாத் பகுதிக்கு நேற்று அதிகாலை விரைந்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில்,3 பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்களுக்கு அருகே ஏராளமான ஆயுதங்கள் கிடந்தன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.