பிஜப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் கடந்த மூன்று நாட்களில் 7 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக கடந்த 4ம் தேதி இரவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர், மாநில காவல்துறையின் சிறப்பு பிரிவு, மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள், சிஆர்பிஎப்பின் கோப்ரா பிரிவினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வியாழனன்று தலைக்கு ரூ.45லட்சம் அறிவிக்கப்பட்ட பாஸ்கர் மற்றும் ரூ.40லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்த சுதாகர் ஆகிய நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மேலும் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இதில் இந்திராவதி தேசிய பூங்கா அருகே வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் மேலும் இரண்டு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
சட்டீஸ்கரில் 3 நாளில் என்கவுன்டரில் 7 நக்சல்கள் பலி
0