காவர்தா: சட்டீஸ்கர் துணை முதல்வராக இருப்பவர் அருண் சாவோ. இவருடைய மருமகன் துஷார் சாகு (21) பெமத்ரா மாவட்டத்தில் வசித்து வந்தார்.பாஜ இளைஞரணியின் துணை தலைவராகவும் இருந்தார். இந்தநிலையில் துஷார் சாகு நேற்றுமுன்தினம் காவர்தா மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு உள்ள 40 அடி உயர மலையில் நின்றிருந்த போது துஷாரும், அவரது நண்பர்கள் 2 பேரும் கால்தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்தனர். இதில்,சாகுவின் 2 நண்பர்கள் நீந்தி உயிர் பிழைத்தனர். ஆழமான இடத்தில் விழுந்ததால் சாகு நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று காலை நீர்வீழ்ச்சியில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டது.