ராய்ப்பூர்: சட்டீஸ்கர் சட்ட பேரவை தேர்தலையொட்டி பாஜவின் தேர்தல் அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார். மோடியின் உத்தரவாதம் 2023 என்ற தலைப்பிலான அறிக்கையில், திருமணமான பெண்களுக்கு வருடத்துக்கு ரூ.12 ஆயிரம் ,நிலமற்ற ஏழை தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி,ஒரு குவிண்டால் நெல் ரூ.3,100க்கு கொள்முதல், ஏழைக்குடும்பங்களுக்கு ரூ.500ல் காஸ் சிலிண்டர் வழங்குவது உள்ளிட்ட பல சலுகைகள் இடம்பெற்றுள்ளன.