சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் 9 மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் எல்லையில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டத்தில் 9 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட 9 மாவோயிஸ்டுகளில் 3 பேர் பெண்கள் என பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து தானியங்கி துப்பாக்கிகள் உட்பட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.